கொரோனா வைரசுக்கு வயசு 20,000 வருஷமாம்…! திகில் கிளப்பிய விஞ்ஞானிகள்
உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என விஞ்ஞானிகள் திகில் தகவலை வெளியிட்டு உள்ளனர்.
200 நாடுகளில் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டி படைத்து வருகிறது கொரோனா என்னும் வைரஸ் தொற்று. சீனாவின் மருத்துவ நகரமான உகானில் இருந்து தான் முதலில் பரவியதாக இன்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அது உண்மையா என்று இன்னமும் நிரூபிக்கப்பட வில்லை.
2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் என்பதால் கோவிட் 19 என்று பெயரிடப்பட்டது. இந்த தொற்றுக்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ். சீன நாட்டில் உருவான சார்ஸ் தான் மரமணு மாற்றம் அடைந்து கொரோனாவாக மாறி உள்ளது என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுகளும் நாளுக்கு நாள் விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர். கொரோனாவுக்கு மாற்று தடுப்பூசி ஒன்றே தான் தீர்வு என்று நம்பப்பட்டு உலகம் முழுவதும் தடுப்பூசி இயக்கம் வேகமாக இயங்கி வருகிறது.
அது ஒரு பக்கம் இருந்தாலும்… கொரோனா பற்றிய ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் கைவிடவில்லை. அந்த வகையில் அதிர்ச்சி தரும் தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
அதாவது… இந்த கொரோனா வைரஸ் ஏதோ… இப்போது 2019ம் ஆண்டு தோன்றி நம்மை எல்லாம் ஆட்டி படைக்கவில்லையாம். கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவிய ஒன்று என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்போது வளர்ச்சி அடைந்து காணப்படும் சீனா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாட்டு மக்களின் டிஎன்ஏ எனப்படும் மரபணுவில் இதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் விஞ்ஞானிகள். உலகம் முழுக்க 26 பகுதிகளில் வசிக்கும் 2500 பேரிடம் இவர்கள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு மரபணு ஆய்வு பற்றிய ஆய்வாகும். ஆய்வு முடிவுகள் இப்போது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளன.
இந்த மரபணுக்களை ஆராய்ந்து பார்த்தோம் என்றால் கடந்த காலங்களில் அவர்களின் உடலில் ஏதேனும் நோய்கள், பாதிப்புகள் இருந்ததா என்பதை கண்டுபிடிக்கலாம். கிழக்கு ஆசியாவில் உள்ள மக்களின் மரபணுக்களில் கொரோனா வைரஸ் மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
பல்வேறு நாடுகளில் வசித்த மனிதர்களின் மரபணுக்களை ஆராய்ந்து பார்த்த போது இந்த விவரங்கள் கிடைக்க பெற்றுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கொஞ்சம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கிழக்கு ஆசியாவில் வசித்து வரும் மக்களின் மூதாதையர்களுக்கு… அதாவது 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனாவுக்கு சீனா தான் காரணம் என்று உலக நாடுகள் குற்றம் சுமத்தி வந்த நிலையில், 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா பூமியில் இருந்தது என்ற ஆய்வு அறிவியல் உலகத்தில் புதிய விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது…!