ஆகஸ்ட் 15ம் தேதி…! பெண்களுக்காக தமிழக அரசு வெளியிடும் முக்கிய அறிவிப்பு…!
சென்னை: ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று, தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அளிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அண்மையில் முடிந்த சட்டசபை தேர்தலில் மற்ற கட்சிகளை விட திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்து தரப்பினரையும் பேச வைத்தது. காரணம்… வாக்குறுதிகளில் முக்கியமாக குடும்ப தலைவிகளை மையப்படுத்தி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அதாவது, குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் அளிக்கும் திட்டம். இந்த திட்டம் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட போதே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயித்தால் எப்படியும் 1000 ரூபாய் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
குறிப்பாக…. குடும்ப தலைவிகள் திமுக அரசின் இந்த திட்டம் பற்றி ஏதேனும் தகவல்கள், அறிவிப்புகள் வெளியாகிறது என்று எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர்.
அதனை உணர்த்தும் விதமாக, புதிய ரேஷன் அட்டைகள் விண்ணப்பிக்கும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒன்றாக இருந்த கார்டுகளும் பிரிக்கப்பட்டு தனித்தனி கார்டுகளாக்கும் விஷயங்களும் அரங்கேற ஆரம்பித்தன.
இப்போது அனைத்து விஷயங்களுக்கு முத்தாய்ப்பு தரும் விதமாக வரும் 15ம் தேதியன்று சுதந்திர தினத்தில் 1000 ரூபாய் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதற்கான பணிகளும் வேகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்தும் கணக்கெடுப்பு இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக தெரிகிறது. ஆக மொத்தம் ஆகஸ்ட் 15ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு இனிப்பான நாளாக மாறும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.