பிரபல தமிழ் பட இயக்குநருக்கு திடீர் விபத்து….! ஷூட்டிங்கில் பதறிய யூனிட்
சென்னை: பிரபல இயக்குநர் சேரன படப்பிடிப்பின் போது விபத்தை சந்தித்துள்ளது, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளம் நடிகர் கவுதம் கார்த்திக் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இயக்குநர் நந்தா பெரியசாமி. படத்தின் பிரபல இயக்குநர் சேரன், முக்கிய கேரக்டர் ரோலில் நடிக்கிறார்.
அதற்கான படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது. ஷூட்டிங்கின் போது சேரன் கீழே விழ பட யூனிட் பதறி துடித்துள்ளது. கிட்டத்தட்ட 8 தையல் அவருக்கு போடப்பட்டு உள்ளது.
இது குறித்து இயக்குநர் நந்தா பெரியசாமி கூறி இருப்பதாவது: படத்தின் கதைக்களமே வீடுதான். ஆகவே தயாரிப்பாளர் ரகுநாதன் 80 லட்சம் ரூபாயில் புதியதாக பிரம்மாண்ட வீடு கட்ட ஆரம்பித்தார்.
ஸ்கிரிப்ட் படி வீட்டை சுற்றி பார்க்கும் காட்சி ஒன்று உண்டு. அப்படி சுற்றி பார்க்கும் போது கீழே விழ வேண்டும் என்பது தான் காட்சி. இந்த படத்தில் சேரனின் அண்ணனாக சரவணன் நடிக்கிறார்.
படப்பிடிப்பின் போது உண்மையாகவே சேரன் வழுக்கி விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 8 தையல் போடப்பட்டு உள்ளது. ஆனால் தையல் போட்ட 10 நிமிடத்தில் மீண்டும் வந்து நடித்து கொடுத்துவிட்டு சேரன் போயிருக்கிறார்.
இதை வெளியில் கூறக்கூடாது என்று சேரன் சொல்லி இருக்கிறார். ஆனால் அனைத்தும் முடிந்துவிட்டதால் இப்போது தெரிவிக்கவேண்டிய கடமை இருக்கிறது என்று கூறி உள்ளார்.