அப்போ ஊரடங்கு நீட்டிப்புதானா..? கலெக்டர்களுடன் மீட்டிங் போடும் முதலமைச்சர்
சென்னை: கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜூலை 29ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா பாதிப்பால் 6ம் கட்ட ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமலில் இருக்கிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு அனுமதி தரப்படவில்லை.
இந் நிலையில், வரும் 29ம் தேதி கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். வரும் 31ம் தேதியுடன் முடிய உள்ள ஊரடங்கை நீட்டிக்கலாமா, இல்லையா? என்பதை பற்றி ஆலோசிக்கிறார்.
அனைத்து மாவட்டங்களிலும் பதிவான கொரோனா தொற்று விகிதங்கள், பாதிப்புகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றுடன் அதிகாரிகள் விளக்க அறிக்கை அளிக்க அரசு தரப்பில் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முதலமைச்சர் ஆலோசனைக்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாவிட்டாலும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புகளே அதிகம் உள்ளது என்று தகவல்கள் வெளியாக உள்ளது.