இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை பார்க்கலாம்:
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பான காவல்துறை தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆதாயத்துக்காக மதத்தை பயன்படுத்துவதால் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்வது இல்லை என்று மா. கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.
எண்ணூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் ஏராளமான பொதுமக்கள் மூச்சு திணறலில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இன்று மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் ரகு, அசன் இருவரையும் போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் முக்கிய விழாவான ஆரூத்ரா தரிசனம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.
585வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இஸ்ரேல், ஹமாஸ் இயக்கம் இடையே போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இது குறித்து பிரான்ஸ் நாடு கவலை தெரிவித்துள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் பஞ்சாப் அணியை , ஒடிசா அணி வீழ்த்தி உள்ளது.