Sunday, May 04 12:20 pm

Breaking News

Trending News :

no image

பிரதமர் கூட்டத்தில்.. குஷ்பு பண்ணிய வேலை….!


பிரதமர் மோடி பிரச்சார கூட்டத்தில் நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு செய்த வேலை தான் அக்கட்சியினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

லோக்சபா 2024 தேர்தல் கணக்கு இன்னமும் அதிமுக, பாஜக கட்சிகள் இடையே முடிவாகவில்லை. எப்படியும் அதிமுகவுடன் கூட்டணி என்று இலவு காத்த கிளியாக ஏமாந்து போன பாஜக, அக்கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய கட்சிகளுக்கு வலை விரித்து வெற்றியும் கண்டு விட்டது.

தந்தை ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம் என பாமக கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுக, பாஜக இடையில் சில நாட்களாக ஓடியது. இறுதியில் பாஜகவுடன் கூட்டணி என்று ஐக்கியமாகிய பாமக சேலத்தில் பிரதமர் மோடியின் பிரச்சாரக்கூட்டத்தில் மேடையும் ஏறியாகிவிட்டது.

மேடையில் கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒன்று திரள, நடிகை குஷ்பு பேசிய பேச்சு தான் அனைத்து தரப்பினர் வாய்க்கும் அவல் ஆக மாறி இருக்கிறது. கூட்டத்தில் அத்தனை பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள், ஈபிஎஸ் இருக்கிறார், அவர் இருக்கிறார்,இவர் இருக்கிறார் என்று அரைகுறை தமிழில் பொளந்து கட்டியிருக்கிறார்.

ஆனால் ஓபிஎஸ் பெயருக்கு பதில் ஈபிஎஸ் என்று சொல்லி குஷ்பு உளறியது பின்னரே பலருக்கு தெரியவந்தது. தலைவர்கள் யார்? யார்? அவர்களில் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்? என்பது கூட தெரியாமல் பிரதமர் பிரச்சாரக் கூட்டத்தில் எதற்கு இப்படி உளறித்தள்ள வேண்டும்? எதற்கு இப்படி பேசவேண்டும்? என்று கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கடும் அதிருப்தியாகினர்.

ஒரு பக்கம் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் முணுமுணுக்க, இன்னும் சிலரோ, இவர்களை போன்றவர்களை வைத்துக் கொண்டு பிரச்சாரத்தின் அடுத்தக்கட்டத்துக்கு வேற போவணுமே என்று சலிப்புடன் கூறியபடி சென்றனர்.

Most Popular