பிஎஸ்பிபி பள்ளியில் படித்தாரா மதுவந்தி மகன்..? நெட்டிசன்ஸ் போட்டு தாக்கிய ஆதாரம்…!
சென்னை: பிஎஸ்பிபி பள்ளியில் மதுவந்தியின் மகன் படிக்கவில்லை என்று நெட்டிசன்கள் போட்டோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள விவரம் இணையத்தில் பரபரப்பாகி உள்ளது.
சென்னை கேகே நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலனின் பாலியல் சீண்டல்கள் விவகாரம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிஎஸ்பிபி பள்ளியை தொடர்ந்து மேலும் பல பள்ளிகளிலும் பாலியல் தொந்தரவுகள் நடந்துள்ள சம்பவம் ஒவ்வொன்றாக வெளி வர ஆரம்பித்து உள்ளது.
புகார்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பிஎஸ்பிபி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த தருணத்தில் அது பற்றி ஊடகங்களிடம் பேசிய மதுவந்தி, யார் குற்றம் செய்திருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்து இருந்தார்.
இந் நிலையில் பிஎஸ்பிபி பள்ளியில் மதுவந்தியின் மகனே படிக்கவில்லை என்று போட்டோ ஆதாரத்துடன் இணையத்தில் நெட்டிசன்ஸ் போட்டு தாக்கி வருகின்றனர். அவரது மகன் உதகையில் உள்ள குட் ஷெப்பர்டு பள்ளில் படிப்பதாக போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த போட்டோவும் இப்போது வைரலாகி இருக்கிறது.