2024ல் மோடி பிரதமர் இல்லை..? தெறிக்க வைத்த மக்கள் மனநிலை
2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் யார் பிரதமராக வேண்டும், மக்களின் மனநிலையில் உள்ளது என்ன என்பதை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது.
கடந்த மே மாதம் மாதம்தோறும் மக்களின் மனநிலை? அவர்களுக்கு நாட்டின் பிரதமராகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ரீதியாக இந்தியாவின் நிலை உயர யார் வரவேண்டும் என்ற கேள்விகளை அடிப்படையாக கொண்டு இந்த தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் நவம்பர் மாதத்தில் மக்களின் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. 2024ம் ஆண்டு தேர்தல் மூலம் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் 69 சதவீத மக்கள் விரும்பி உள்ளனர். நரேந்திர மோடி வேண்டும் என்று 31 சதவீதம் பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
கடந்த மே மாதம் முதல் கருத்துக்கணிப்பில் தொடர்ந்து ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விட முன்னே இருக்கிறார். பிரதமர் மோடிக்கு மே மாதம் 38 சதவீதம், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் முறை 39 சதவீதம், செப்டம்பரில் 41 சதவீதம், அக்டோபரில் 30 சதவீதம், நவம்பரில் 31 சதவீதம் பேர் என மக்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.
ராகுல் காந்திக்கு மே மாதம் 61 சதவீதம், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முறையே 60 சதவீதம், செப்டம்பர் 59 சதவீதம், அக்டோபர் 70 சதவீதம், நவம்பரில் 69 சதவீதம் பேர் பிரதமராக வர வேண்டும் என்று ஆதரவை வெளியிட்டு உள்ளனர்.
கடந்த 7 மாதங்களில் தொடர்ந்து ராகுல் காந்தியே முன்னிலையில் உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் எத்தனை கருத்துக் கணிப்புகள் வந்தாலும் இறுதியில் மோடியே பிரதமர் தான் என்கின்றனர் பாஜகவினர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்… இந்த கருத்துக்கணிப்புகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டது, தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் மோடிக்கான ஆதரவு மிக அதிகம், எனவே அவர் தான் 2024 தேர்தலிலும் வென்று பிரதமராவார் என்கின்றனர் உறுதியாக…!