Sunday, May 04 11:52 am

Breaking News

Trending News :

no image

#NarendraModi ரொம்ப பிசி…! தமிழ்நாடு வர முடியல..#NellaiFlood


பிரதமர் மோடி ஏன் தமிழக வெள்ளம் பாதிப்பை பார்க்க வரவில்லை என்பதற்கு காரணம் ஒன்றை கூறி உள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு என்பது கொஞ்சம் நஞ்சமல்ல. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மட்டுமல்லாது தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களை பிரித்து போட்டு இருக்கிறது.

நாள்கணக்காய் பெய்த மழையால் ஊரெங்கும் வெள்ளம் சூழ, மக்களின் பாடு சொல்லி மாளாது. தமிழக அரசு, திமுகவினர், எதிர்க்கட்சிகளில் சில என வெள்ள நிவாரண பணிகள் மும்முரமாக நடந்தது. தமிழக அரசும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 6000 ரூபாய் நிவாரணத்தை அளித்தது…. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரிடையாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்று ஆய்வு பணிகளை பார்வையிட்டார்.

கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராக பல நாட்கள் பிடிக்கும் என்ற நிலையில் பிரதமர் மோடி ஏன் தமிழக வெள்ள பாதிப்பை பார்க்க நேரில் வரவில்லை என்ற கேள்வி தான் மையமாக வைக்கப்படுகிறது.

இந் நிலையில் பிரதமர் மோடி வராதது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமும், காரணமும் கூறி உள்ளார். அவர் தெரிவித்து உள்ளதாவது;

தமிழக வெள்ள பாதிப்பை பார்வையிட நேரில் வர வேண்டும் என்பது பிரதமருக்கு ஆசை. ஆனால் அவருக்கு அதிகமான பணிச்சூழல் உள்ளது, இதுவே அவர் வர இயலாததற்கு காரணம் என்று கூறி இருக்கிறார்.

அண்ணாமலையின் இந்த பதிலை கண்ட பலரும் நெத்தியடியாக இணையத்தில் பதிலடி தந்து வருகின்றனர். பிரதமரான தருணத்தில், குஜராத் வெள்ள பாதிப்பை நேரடியாக சென்று பார்வையிட்டாரே? மக்களை விட வேறு என்ன மகேசன் பணி இருக்கிறது?

காசி தமிழ்சங்கம், குஜராத் வைரமாளிகை திறப்பு விழா செல்ல நேரம் இருக்கும் போது இதற்கு இருக்காதா? என்ன கேள்விகளால், அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களையும் வெளியிட்டு போட்டு தாக்கி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Most Popular