சசிகலாவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ…! வெளியில் வந்து சொன்ன முக்கிய விஷயம்…!
சென்னை: அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சென்னையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.
சொத்துக் குவிப்பி வழக்கில் 4 ஆண்டு சிறைவாசம், கொரோனா தொற்று ஆகியவற்றில் இருந்து விடுதலை ஆகி உள்ள சசிகலா கடந்த 8ம் தேதி சென்னை பயணமானார். 23 மணி நேரம் நிதான ஊர்வலத்துக்கு பிறகு மறுநாள் காலை 6.30 மணியளவில் அவர் சென்னை வந்து சேர்ந்தார்.
அவருக்கு யார், யார் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். தி நகரில் தங்கி உள்ள சசிகலாவை சந்தித்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்து உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: 2 முறை எனக்கு எம்எல்ஏ சீட் சிபாரிசு செய்து அதை வாங்கி கொடுத்தவர் சசிகலா. நான் என்றைக்கும் சசிகலா விசுவாசி. அவரால் பலனடைந்தவர்கள் ஒருநாள் அவரது காலில் விழுவார்கள். தவறு செய்தவர்கள் நன்றி கெட்டவர்கள் என்று தெரிவித்தார்.
இந்த நாஞ்சில் முருகேசன் வேறு யாருமல்ல… கடந்தாண்டு பாலியல் வழக்கில் பரபரப்பாக பேசப்பட்டவர். தொடர் குற்றச்சாட்டுகளினால் ஒரு கட்டத்தில் அதிமுகவிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டவர்.