மாஸ்க்கும்… மறந்த மக்களும்….! லாக்டவுனுக்கு தயாராகும் தமிழகம்…?
சென்னை: அதிகரிக்கும் கொரோனா தொற்றால், இரவு நேர ஊரடங்கை பிறப்பிக்க தமிழக அரசு தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் அண்மைக்காலமாக குறைந்து காணப்பட்ட கொரோனா தொற்றுகளின் கடந்த 2 வாரங்களாக கவலை அளிக்கும் சென்றுவிட்டது. 500, 1000 என்று இருந்த தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 6000ஐ எட்டி செமத்தியாக அதிர வைத்துள்ளது.
தொடர்ந்து உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் கொரோனா பாதிப்புகளை குறைக்க தமிழக அரசு ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும் மறுபக்கம் நாள்தோறும் தொற்றுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் மருத்துவமனைகளில் அட்மிட் பண்ண முடியாத அளவுக்கு நோயாளிகள் உள்ளதால் பலரையும் வீட்டில் இருந்தே சிகிச்சையை தொடருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நண்பகல் 12 மணி அளவில் அவசர ஆலோசனையை நடத்துகிறார். ஏற்கனவே ஒரு பக்கம் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டாலும் அவை பலனளிப்பதாக தெரியவில்லை.
பாதிப்புகள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உள்ளதால் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களின் பொறுப்பற்ற தன்மையால் பாதிப்புகள் அதிகரித்தாலும் கட்டுப்படுத்தும் வகையில் கடும் நடவடிக்கைகள் அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.