‘ஜெட்’ வேகத்தில் கொரோனா…! சேட்டன்களுக்கு ‘கேட்’ போட்ட கர்நாடகா
பெங்களூரு: கொரோனா தொற்றும் மீண்டும் உச்சக்கட்டத்தில் இருப்பதால் கேரள எல்லையை மூடி அதிரடி காட்டி உள்ளது கர்நாடகா.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோன தொற்று உச்சத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக கொரோனா தொற்றுகளை இந்த மாநிலம் நாள்தோறும் சந்தித்து வருகிறது.
நாள்தோறும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந் நிலையில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கர்நாடகா தடை விதித்து உள்ளது.
கேரளாவில் இருந்து பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை கர்நாடகா விதித்து உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் அவர்களுக்கு அனுமதி உண்டு. இந்த சோதனையும் 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்டு இருக்கும் என்று கர்நாடகா கூறி உள்ளது.