ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை.. இந்தியாவுக்கு பாதிப்பா..?
டோக்கியோ: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் வடகிழக்கு பகுதியான மியாகியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. மியாகி பிராந்தியத்தில் 60 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான தகவல்கள் ஏதும் வெளியாக வில்லை. கடந்த மாதம் இதே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.