சென்னை To கன்னியாகுமரி வரை… இனி போலாம் மக்களே…!
சென்னை: சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 27 மாவட்டங்களில் வரும் 28ம் தேதி முதல் அரசு விரைவு பேருந்துகள் இயங்க உள்ளன.
ஒட்டுமொத்த மாவட்டங்களும் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. அந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகளுக்கு ஏற்ப தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி வகை 2ல் கடலூர், கன்னியாகுமரி, தருமபுரி, சிவகங்கை, ராணிப்பபேட்டை, வேலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் வரும் 28ம் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்க உள்ளது.
வகை 3ல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மாநகர பேருந்துகள் ஏற்கனவே தமது சேவையை தொடங்கிவிட்டன.
இந் நிலையில் வரும் 28ம் தேதி முதல் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், அதன் சார்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாவட்டங்கள் இடையே பேருந்துகள் ஓடும். 11 மாவட்டங்களில் மட்டும் இந்த விரைவு பேருந்து சேவை கிடைக்காது.