வானதிக்கு தெரிஞ்ச ‘கோவை’ ரிசல்ட்…! Template ஆன ரியாக்ஷன்
சவுமியா அன்புமணி பற்றி பேசும் போது மாற்றி மாற்றி பேசி அண்ணாமலை குழப்பத்தை ஏற்படுத்த என்ன இது என்ற போக்கில் வானதி சீனிவாசனின் ரியாக்ஷன் படு வைரலாகி இருக்கிறது.
மற்ற தொகுதிகளை விட கோவை நாடாளுமன்ற தொகுதி கடும் அரசியல் கனல் தெரிகிறது. திமுக, அதிமுக, பாஜக கட்சிகளின் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நடக்கிறது. எப்படியும் வென்றே தீருவது என்று அண்ணாமலை வலம் வர… விடக்கூடாது மண்ணை கவ்வ வைத்துவிட வேண்டும் என்று திமுகவும், அதிமுகவும் தீயாய் வேலை செய்து வருகின்றன.
வாரிசு அரசியல் பற்றி போகும் இடம் எல்லாம் அண்ணாமலை பொங்கி தள்ளி வருகிறார். கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்த போது தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி வாரிசு அரசியல் பட்டியலில் வருவாரா? மாட்டாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டு மடக்கினர்.
அதற்கு அவர் அளித்த பதில்தான் இன்றைய meme content ஆக வலம் வர ஆரம்பித்துள்ளது. சவுமியா அன்புமணி, அவரது பேத்தி திருமணம் முடிந்த பின்னரே அரசியலுக்கு வந்திருக்கிறார், அவர் வாரிசு அரசியலில் இல்லை என்று கூறிய அண்ணாமலை, தான் சொல்வது சரிதானே என்று அருகில் இருந்த வானதியிடம் கேட்டு தெளிவு பெறுகிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத வானதி குழப்பம் அடைகிறார். குழப்பத்தின் போது அவர் ஒவ்வொரு நொடியிலும் காட்டிய முகபாவனை தான் இப்போது இணைய ஊடகங்களில் புதிய template ஆக மாறி இருக்கிறது.
கோவை நாடாளுமன்ற தொகுதியின் ரிசல்ட் தெரிஞ்சுடுச்சு போல, அதான் இந்த ரியாக்ஷன் என்றும் சமூக வலைதளங்களில் போட்டு தாக்கி வருகின்றனர்.
அந்த ரியாக்ஷன் வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.