அரசு ஊழியர்களுக்கு ‘அதிர்ச்சி’ தந்த தமிழக அரசு….!
சென்னை: அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையான ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. கொரோனா கால நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் ஒவ்வொருவருக்கும் 15 நாட்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு ஊதிய தொகை தமிழக அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.