Sunday, May 04 12:14 pm

Breaking News

Trending News :

no image

வேண்டாங்க….ஸ்டாலினிடம் கதறி அழுதாரா துர்கா…? என்ன நடந்தது..?


சென்னை: கோவையில் கொரோனா வார்டுக்குள் முதல்வர் ஸ்டாலின் போகும் விவரம் அறிந்த அவரது மனைவி துர்கா வேண்டாம் என்று கதறி அழுத தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

பதவியேற்ற ஒரு மாதம் ஆன நிலையில் முதல்வர் ஸ்டாலின் பரபரப்பாக இயங்கி வருகிறார். கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையானவற்றை பார்த்து செய்வது,  குறிப்பாக மகளிருக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவது என்று பம்பரமாக சுழன்று வருகிறார்.

கொரோனா காலத்தில் அவரது செயல்பாடுகளை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக கோவை சென்ற போது கொரோனா மையத்துக்கு  சென்று நேரிடையாக நோயாளிகளை சந்தித்தது குறித்து பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கோவை சென்ற போது முதல்வர் ஸ்டாலின் கொரோனா வார்டுக்குள் போக வேண்டும் என்பதை மருத்துவர்களிடம் கூறி உள்ளாராம். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் வேண்டாம் என்று தடுத்துள்ளனர். இது மிகவும் அபாயகரமானது, வேண்டாம் என்று மருத்துவர்கள் எடுத்து சொல்லி உள்ளனர்.

ஆனாலும், பிடிவாதமாகவும் அதே சமயத்தில் மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானமாக இருந்தாராம்.

சாதாரண பிபிஇ கிட் அணிந்து கொண்டு, வெகு இயல்பாக கொரோனா சிகிச்சை மையத்துக்குள் சென்று வந்தார். அந்த தருணத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றிய விவரம் இப்போது வெளியாகி இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலினை போனில்தொடர்பு கொண்ட மனைவி துர்கா ஸ்டாலின், வேண்டாம், எங்களையும் நினைத்து பாருங்கள் என்று உடைந்து அழுதே விட்டாராம். ஆனால் அவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி ஸ்டாலின் கொரோனா வார்டுக்குள் சென்று திரும்பி வந்திருக்கிறாராம்.

தமது விசிட் குறித்து அப்போது விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், உயிரை பணயம் வைத்து, பணியாற்றும் மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு ஊக்கமும், தன்னம்பிக்கையும் தரவே தான் சென்றதாக பேட்டி அளித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

Most Popular