நாராயணசாமி ஆட்சி.. பாஜக வைக்கும் வேட்டு…! மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளதால் நாராயணசாமி அரசு கவிழும் நிலையில் உள்ளது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியில் இருக்கும் முக்கிய எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந் நிலையில் ஆளும் காங்கிரசுக்கு மேலும் ஒரு நெருக்கடி தரும் விதமாக அக்கட்சியின் காமராஜர் தொகுதி எம்எல்ஏவான ஜான்குமார் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் 2016ம் ஆண்டு நாராயணசாமிக்கு தமது தொகுதியை விட்டு தந்தவர்.
நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் என அடுத்தடுத்து அக்கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது ஆளும் நாராயணாசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.