கோலிவுட்டில் அடுத்த சோகம்…! பிரபல தமிழ் இயக்குநர் சகோதரர் கொரோனாவுக்கு பலி…!
சென்னை: பிரபல தமிழ் இயக்குநர் ராஜூ முருகன் சகோதரர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இந்தாண்டு தமிழ் திரையுலகின் சோகமான ஆண்டு. கடந்த 3, 4 மாதங்களாக ஏராளமானோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். தொடர் பலர் திரையுலகில் கொரோனாவுக்கு உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந் நிலையில் மேலும் ஒரு சோகமாக பிரபல இயக்குநர் ராஜூ முருகனின் சகோதரரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றால் உயிர் இழந்துள்ளார். கற்றது தமிழ், ஜோக்கர் போன்ற திரைப்படங்களில நடித்து இருக்கிறார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து இருக்கிறார். அவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.