சோளமுத்தா… போச்சு..! மக்களவையில் ‘ஜீரோ’ ஆன அதிமுக….!
டெல்லி: ரவிந்திர நாத் எம்பியை கட்சியில் இருந்து நீக்கியதன் மூலம், நாடாளுமன்ற மக்களவையில் அதிமுக தமது பிரநிதித்துவத்தை இழந்து இருக்கிறது.
யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பை அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார். ஓபிஎஸ்சை ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கிவிட்ட நிலையில் இப்போது, அவரது மகன்கள் உள்ளிட்ட 18 பேரையும் நீக்கி கட்டம் கட்டி இருக்கிறார்.
இவர்களில் ரவிந்திரநாத் அதிமுகவின் மக்களவை எம்பி. அவர் இப்போது நீக்கப்பட்டு இருப்பதால் நாடாளுமன்ற மக்களவையில் அதிமுக தமது பிரதிநிதித்துவத்தை இழந்து காணப்படுகிறது.
ரவிந்திரநாத் எம்பியின் அதிமுக குழு தலைவர் பொறுப்பு, அவருக்கான அறை உள்ளிட்டவையும் விரைவில் திரும்ப பெறப்படும் அல்லது பிடுங்கப்படும் என்று தெரிகிறது.
அதிமுகவின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்ற மக்களவையில் இல்லாமல் போனது காலம்காலமாய் அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியாய் இருக்கிறது. அதே நேரத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் 4 எம்பிக்கள் அதிமுகவுக்கு உள்ளனர் என்பது சற்றே ஆறுதலாக பார்க்கப்படுகிறது.