தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் நியமனம்…! அவர் தான்… அவரே தான்…!
சென்னை: தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிமிடத்தில் இருந்து ஒரு முக்கிய கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. யார் தலைலை செயலாளராக நியமிக்கப்பட உள்ளார் என்பது தான்.
அதற்கான விடை இன்று கிடைத்துள்ளது. கடந்த 2 நாட்களாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் இப்போது ஊர்ஜிதம் ஆகி இருக்கிறது. தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்த ராஜிவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இறையன்பு ஐஏஎஸ் நிர்வாகத்தில் மிகுந்த திறமைவாய்ந்த அதிகாரி. அவரது சொந்த ஊர் சேலம் ஆகும். நாகை மாவட்ட சார் ஆட்சியர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தவர்.
சுற்றுலாத்துறை செயலாளராகவும் இருந்த அனுபவம் பெற்றவர் இறையன்பு. தற்போது அண்ணா பல்கலைக்கழக மேலாண்மை கல்வி நிறுவன இயக்குநராக உள்ள அவர் தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.