Sunday, May 04 12:21 pm

Breaking News

Trending News :

no image

புதிய தேர்தல் கமிஷனராக ராஜீவ்குமார் நியமனம்...! ஜனாதிபதி ஒப்புதல்


டெல்லி: தேர்தல் ஆணையர் பதவிக்கு ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக உள்ளவர்  திவாகர் குப்தா. அவரது பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. ஆகையால் அந்த பதவி அசோக் லவாசாவுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவர் பதவியை அசோக் லவாசா ஏற்றுக்கொண்டார். அதனால், தேர்தல் ஆணையர் பதவியை லவாசா ராஜினாமா செய்து,  அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

லவாசாவின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு, காலியாக  உள்ள தேர்தல் ஆணையர் பதவிக்கு ராஜீவ் குமாரை நியமனம் செய்துள்ளார். புதிய ஆணையரான ராஜீவ் குமார் முன்னாள் நிதித்துறை செயலராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular