டெல்லி To சென்னை.. ராகவனுக்கு கிடைத்த மெசேஜ்…!
சென்னை: டெல்லியில் இருந்து கிடைத்த க்ரீன் சிக்னல் காரணமாக பாலியல் சர்ச்சை வீடியோவில் சிக்கிய கேடி ராகவன் தெம்பாக உள்ளாராம்.
கடந்த சில வாரங்கள் முன்பு எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்று குழம்பி தவித்தனர். காரணம் பாஜகவின் முக்கிய பிரமுகரும், பொது செயலாளருமான கே டி ராகவனின் பாலியல் வீடியோ. தமிழகம் மட்டுமல்ல, டெல்லி பாஜகவையும் சற்றே அதிர வைத்தது அந்த வீடியோ.
தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு, தமது பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கேடி ராகவன். தமது பெயர் டோட்டலாக டேமேஜ் ஆனதால் கட்சி நிகழ்ச்சிகளிலும் சரி.. கமலாலயம் வருதிலும் சரி… சற்றே தொய்வை சந்தித்தார் கேடி ராகவன்.
பெரிதாக எதுவும் நடக்கும் என்று எதிர்பார்த்த பலருக்கும் கேடி ராகவன் பாலியல் விவகாரம் தற்போது சுத்தமாக ஆப் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இது பாஜகவில் கேடி ராகவனுக்கு எதிராக இருந்தவர்களுக்கே பெரும் ஆச்சரியமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிலைமைகள் இப்படி இருக்க…. நேற்று மாலை சங்கராச்சாரியாக இருக்கும் விஜயேந்திரரை சந்தித்துவிட்டு திரும்பி இருக்கிறார் கேடி ராகவன். அதற்கு முன்னதாக தாம் மீண்டும் களத்தில் வந்துவிட்டதை உணர்த்த, காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி போராட்டத்தில் கைதான கட்சி தொண்டர்கள், இந்து முன்னணி பொறுப்பாளர்களை செங்கல்பட்டு சிறையில் சந்தித்து உள்ளார்.
விஜயேந்திரனுடான சந்திப்பு கேடி ராகவனுக்கு தெம்பை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாலியல் விவகாரத்தில் கேடி ராகவனுக்கு மேலும் நெருக்கடியை தரும் அளவுக்கு எந்த சட்ட முகாந்திரமும இருக்கவில்லை. அதன் காரணமாக அந்த விவகாரம் அத்தோடு முடித்து வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதே தருணத்தில் டெல்லியில் இருந்து கேடி ராகவனுக்கு மத்திய அமைச்சர்கள் சிலர் மூலம் கட்சி தலைமையிடம் தமது நிலையை கொண்டு சென்றிருக்கிறராம். அதன் பின்னர் சில பாசிட்டிவ் சிக்னல்கள் கிடைக்கவே தற்போது உற்சாகமாக உள்ளாராம் கேடி ராகவன்.
டெல்லியில் இருந்து கிடைத்த முக்கியமான சிக்னலுக்கு பின்னரே விஜயேந்திரருடான சந்திப்பு நிகழ்ந்திருப்பதை சுட்டிக்காட்டும் விவரம் அறிந்தவர்கள், தற்போது கேடி ராகவனுக்கு ரூட் கிளியர் ஆகிவிட்டதாம்…. இனி ஆக்டிவ் அரசியலில் வழக்கம் போல் இறங்குவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆனாலும், இந்த விவகாரத்தை இத்தோடு விடுவதாக இல்லை, எப்படியாவது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்த கட்சிக்குள்ளே சில தடைகள் ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன என்பது கூடுதல் தகவல்.