திமுக தேர்தல் அறிக்கை…! முதலமைச்சர் எடப்பாடி சொன்ன ‘கமெண்ட்’..!
சேலம்: திமுக தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை, படித்துவிட்டு கருத்து சொல்கிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக தேர்தல் அறிக்கைக்கு முன்பே பல திட்டங்களை, அறிவிப்புகளை செயல்படுத்தியது அதிமுக அரசாங்கம். நீட் தேர்வு தமழக்ததில் இருக்கக் கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு. புதுச்சேரியில் பாஜக கூடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் சுமூகமாக அனைத்தும் முடியும்.
புதிய தமழகம் கட்சி இப்போது அதிமுக கூட்டணியில் இல்லை. தேமுதிக சென்றதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பக்குவம் இல்லாமல் இருக்கின்றனர். கூட்டணி ஒத்துவராத பட்சத்தில் வெளியேறி விடலாம். அதற்காக இப்படி கூறுவது சரியாகாது.
அதிமுக வேட்பாள்களுக்கு ஏற்பட்டு உள்ள பிரச்னை சரி செய்யப்படும். தேர்தலில் அதிமுக தான் பெரும்பான்மையான இடங்களில் வெல்லும் என்று கூறினார்.