Sunday, May 04 01:07 pm

Breaking News

Trending News :

no image

மொத்தம் 11 ஆப்ரேஷன்…! ஆனாலும் பொழைக்கல… உயிரிழந்த பிரபல நடிகை…!


பிரபல முன்னணி நடிகையான சரண்யா சசி உயிரிழந்த சம்பவம் கேரள சினிமா உலகத்தை பெருத்த அதிர்ச்சியில் கொண்டு போய் இருக்கிறது.

மல்லுவுட்டை சேர்ந்தவர் நடிகை சரண்யா சசி. பச்சை என்கிற காத்து என்ற தமிழ் படத்தில் கோலிவுட்டில் அறிமுகமானார். 2012ம் ஆண்டு அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  அவருக்கு இதுவரை மொத்தம் 11 ஆபரேஷன் நடைபெற்றது.

தொடர்ந்து ஆபரேஷன் என்பதால் மீண்டும், மீண்டும் கட்டி வந்து கொண்டு இருந்தது. பணப்பிரச்னையும் உருவானது. இந்த பிரச்னைகளுக்கு இடையே சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

மே 23ம் தேதி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும் அவர் உடல்நிலை தேறவில்லை. இந் நிலையில் 35 வயது நிரம்பிய சரண்யா சசி. இன்று காலமானார். அவரது மரணம் அறிந்த திரையுலகத்தினரும், ரசிகர்களும் பெருத்த அதிர்ச்சியில் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 10 வருஷத்தில் 11 ஆபரேஷன்கள் என அவர் தொடர்ந்து படு சிரமத்தில் இருந்து கடைசியில் உயிர்விட்டதை அறிந்த கேரள திரையுலகத்தினர் சோகத்தில் இருக்கின்றனர்.

Most Popular