ஆபாச புகழ்..! அண்ணாமலையிடம் கதறிய நடிகை
அண்ணாமலைக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தம்மை பற்றியும் உளறும் கட்சி பிரமுகரை உலகம் ஏன் நம்புகிறது என்று பிரபல நடிகை பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
திருச்சி சூர்யா சிவா… இவரை தெரியாதவர்கள் குறைவே என்று சொல்லலாம். இவரது தந்தை திருச்சி சிவா. இவரையும் யாரும் தெரியாவர்கள் இல்லை.
ஆனால் தந்தைக்கு எதிராக பாஜகவில் தம்மை இணைத்துக் கொண்டவர் திருச்சி சூர்யா சிவா. அவரின் செய்கைகள் பல வேறு லெவலில் இருக்க, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இப்போது வலைதளங்களில் அவரின் காணொளிகள் மட்டுமல்லாது, சாட்டை துரைமுருகனுடன் நடந்த தொலைபேசி உரையாடல் ஏக பிரபலம். பாஜகவுடன் கூட்டு சேர்ந்து திமுகவை எதிர்ப்பது என்ற நாம் தமிழர் கட்சியின் நடவடிக்கைகளை தமது ஒரு பதிவு மூலம் மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். சீமானுக்கும், அண்ணாமலைக்கும் இணைப்பு பாலமே சாட்டை துரைமுருகன் தான் என்பது இதில் வெளியானது.
அந்த தொலைபேசி உரையாடலை திருச்சி சூர்யா சிவாவே தமது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அது பெரும் பரபரப்பை உண்டு பண்ண, சாட்டை துரைமுருகனிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்துள்ளது. உடனே மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு திருச்சி சூர்யா சிவா, அவரை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
இப்படி இருவரும் மாறி, மாறி பதிவுகளை வெளியிட, நடிகை கஸ்தூரி களத்துக்கு வந்துள்ளார். தம்மை பற்றி சம்பந்தம் இல்லாமல் திருச்சி சூயா சிவா பேசி உள்ளார் என்று அதில் போட்டு உடைத்துள்ளார். இவரை இன்னுமா நம்புகிறது என்று அண்ணாமலைக்கும் ஒரு ஷொட்டு வைத்துள்ளார் கஸ்தூரி.