Sunday, May 04 12:34 pm

Breaking News

Trending News :

no image

தொடங்குகிறது புதிய அத்தியாயம்…! இன்று கூடும் சட்டசபை முதல் கூட்டத்தொடர்…!


சென்னை: புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ள புதிய சட்டமன்றத்தின் முதல் அமர்வில் நடைபெறும்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. முதல் அமைச்சராக ஸ்டாலின் மே 7ம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

முதல் அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களும் அகர வரிசைப்படி பதவியேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் பதவியேற்கின்றனர்.

உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்ளும் வசதிக்காக கு. பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றார்.

புதிய எம்.எல்.ஏக்கள் இன்று பிச்சாண்டி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொள்வார்கஙள. பின்னர், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் நாளை தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Most Popular