பொதுமக்களுக்கு திடீர் ஷாக்…! தமிழகத்தில் மீண்டும் கடைகள் அடைப்பு…?
சென்னை: உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
என்ன நடக்குகிறது என்றே தெரியவில்லை. 10 காசு, 20 காசு என நாள்தோறும் உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் இப்போது உச்சத்தில் இருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துவிட்டது.
நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களின் சொல்லொண்ணா துயரத்தில் இருக்கின்றனர். விலைவாசியும் தாறுமாறாக உயர்ந்து கொண்டே போகிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் கடையடைப்பு போராட்டம் கட்டாயம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா கூறி இருப்பதாவது: முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று தமிழகம்மு முழுவதும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது இல்லை என்று உறுதிமொழி எடுத்துள்ளோம்.
புகையிலை பொருட்கள் அனைத்தும் லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக கூறப்படுவதால் அந்த பொருட்கள் பாரம் ஏற்றக் கூடாது என்று அறிவுறுத்த இருக்கிறோம். தமிழகத்தில் 5 பேர் தான் புகையிலை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். அவர்களை பற்றிய விவரங்கள் அரசுக்கு தெரிவிக்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலையை அரசுகள் குறைக்க வேண்டும். இல்லை என்றால் கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.