எஸ்பிஐ வாடிக்கையாளரா…? வங்கி அறிவித்த முக்கிய விஷயம்
எஸ்பிஐயில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இந்த வங்கியானது ஒரு முக்கிய அறிவிப்பாக புதிய சேவை கட்டணங்களை அறிவித்துள்ளது. இந்த கட்டணங்கள் வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
எஸ்பிஐயில் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு உள்ளவர்கள், ஜூலை 1ம் தேதி முதல் ஏடிஎம்கள், வங்கி கிளைகளில் 4 முறை மட்டும் பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் பபோதும், 15 ரூபாய், அதோடு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.
அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 10 காசோலைகள் அடங்கிய செக் புத்தகம் இலவசமாக தரப்படும். இந்த 10 தாள்களை கொண்ட செக் புத்தகம் பெற 40 ருபாய், ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். 25 தாள்கள் கொண்ட செக் புத்தகம் வேண்டும் என்றால் 75 ரூபாய், ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.