#Vijayakant மரணம்…! கதறி துடித்த தொண்டர்கள்
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த விஜயகாந்த் காலமானார்.
எப்படி இருந்த மனுஷன் என்று எல்லோரும் வாய் பிளக்க வைக்கும் அளவுக்கு இருந்தவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சி ஆரம்பித்து ஓஹோவென்று வந்தவர் இன்று அரசியலில் வாய்ஸ் இன்றி இருக்கிறார்.
கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகிவிட்ட நிலையில், தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ள விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதை மருத்துவ நிபுணர்கள் உறுதி செய்து, தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விவரத்தை கட்சியின் நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விஜயகாந்த் உடல்நிலை பற்றி அறிந்த கட்சி தொண்டர்கள் அவருடைய வீடு அமைந்துள்ள சாலிகிராமத்தில் குவிந்து வருகின்றனர். பலரும் கதறி அழுதபடி அங்கும் இங்கும் கவலையுடன் தவித்து வருகின்றனர்.
தொடர்ந்து அங்கு ஒரு பதற்றமான நிலை காணப்படுவதால் போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த செய்தி அறிந்த திரைத்துறையினர், மற்ற கட்சிகளின் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்சி தொண்டர்கள் கதறி அழுதபடி உள்ளது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.