அப்பல்லோவில் பிரபல அரசியல் தலைவர் வாரிசு அட்மிட்…! தொண்டர்கள் கவலை
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும்,காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோவில் சேர்க்கப்ட்டு உள்ளார்.
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பியாக இருப்பவர் கார்த்தி சிதம்பரம். கட்சி வேலைகளை கவனித்து வந்த அவருக்கு திடீரென நீர்க்கட்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு சிறப்பு மருத்துவக்குழுவினர் பரிசோதனை நடத்தி இருக்கின்றனர். பரிசோதனை முடிவுகளுக்கு பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று அதன் பிறகே கார்த்தி சிதம்பரம் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.