பரோட்டா சாப்பிடாதீங்க..! இளைஞருக்கு நேர்ந்த கதி..!
இடுக்கி: கேரளாவில் பரோட்டா தொண்டையில் சிக்கியதால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
இன்றைய தலைமுறை மட்டுமல்ல… கடந்த கால தலைமுறைக்கும் மிகவும் பிடித்தமான உணவு. பரோட்டாவுடன் அசைவ குருமா, கறி வகைகள் சேர்த்து சாப்பிட்டால் அடடா என்று நாக்கை சப்பு கொட்டாதவர்களே இருக்க முடியாது.
ஆனால் இப்படிப்பட்ட பரோட்டா கேரளாவில் ஒரு இளைஞனின் மரணத்துக்கு காரணமாக இருந்திருக்கிறது. கேரளாவில் இடுக்கி மாவட்டம் பனையார் என்ற பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. பரோட்டா விரும்பி.
ராத்திரி நேரம் கடை ஒன்றில் தமக்கு பிடித்தமான உணவான பரோட்டாவை வாங்கி உள்ளார். ஆசை தீர ஒரு பிடி, பிடித்துக் கொண்டு இருக்கும் போதே தொண்டையில் பரோட்டா சிக்கியது.
மூச்சு விட முடியாமல் அவர் திணற உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார். ஆனால் விதி வேறுமாதிரியாக யோசித்தது. சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் போக, பாலாஜி இறந்தார். இந்த விவரம் பல்வேறு பகுதிகளுக்கும் பரவ… பெரும் பரபரப்பாகி இருக்கிறது.