Sunday, May 04 12:18 pm

Breaking News

Trending News :

no image

பல்நீஷ்ஷாமி…! அதிமுக வேட்பாளரை அல்லுவிடும் நெட்டிசன்ஸ்


தேர்தல் தேதி அறிவிச்சாலும் அறிவிச்சாங்க, அரசியல் கட்சிகளையும், அதன் முக்கிய தலைவர்கள், பிரமுகர்களை கிண்டலடித்து இணையத்தில் பதிவாகும் கமெண்ட்டுகள் வேற ரகம்.

அதில் லேட்டஸ்ட்டாக ஒரு பதிவு இணையத்தில் சக்கை போடு போடுகிறது. அதிமுக தரப்பில் லோக்சபா 2024 தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருந்தார்.

பட்டியலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் டாக்டர் ஜெயவர்தனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அவர் தென் சென்னை தொகுதியில் களம் காண்கிறார். பெயர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜெயவர்தன் தமது தேர்தல் பிரச்சார பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.

அவரை ஊடகங்கள் தேடிச் சென்று பேட்டி எடுத்து ஒளிப்பரப்பி வருகின்றன. அப்படி வெளியான ஒரு வீடியோ தான் இப்போது நெட்டிசன்கள் கமெண்டுகளினால் நெம்பி வருகின்றனர்.

தமது உச்சரிப்பின் போது ஜெயவர்தன், எடப்பாடி பழனிசாமியின் நல்வாழ்த்துகளுடன் போட்டியிடுவதாக கூறினார். அப்போது பழனிசாமி என்பதை பல்நீஷஷாமி என்று பேசி வைக்க, அந்த வீடியோ இணையத்தை சுற்ற ஆரம்பித்தது. அப்படியே குசும்பு நெட்டிசன்களும் வீடியோவை சுற்றி, சுற்றி வந்து கிண்டலடித்து அதகளம் பண்ணி வருகின்றனர்.

இதை கண்ட வேட்பாளர் ஜெயவர்தன் ஆதரவாளர்கள், பதிலடி தந்து வருகின்றனர். உச்சரிப்பை எடை போட வேண்டாம், அவரை செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை கவனியுங்கள் என்றும் அட்வைஸ் செய்து தள்ளுகின்றனர்.

Most Popular