Sunday, May 04 12:15 pm

Breaking News

Trending News :

no image

செந்தில் பாலாஜி தூக்கிய 'மெகா' விக்கெட்…! திமுகவில் இணைந்த டிடிவி 'வலது' கரம்…!


சென்னை: முன்னாள் அமைச்சரும், அமமுக துணை பொது செயலாளருமான பழனியப்பன் திமுகவில் இன்று இணைந்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு பின்னர் அமமுக கலகலத்துவிட்டது என்பது கடந்த சில நாட்களாக நன்றாகவே தெரிகிறது. அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், அதிமுக, திமுகவில் இணைந்து வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் கட்சியை ஒரு உலுக்கி இருப்பது நன்றாக தெரிய ஆரம்பித்தது. அதன் முக்கிய கட்டமாக அமமுகவின் துணை பொது செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார்.

அமமுகவில் இருந்து திமுக வந்து அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் தீவிர முயற்சியே இதற்கு காரணம். தம்மோடு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களை கொத்தாக திமுகவில் சேர்க்க அவர் தீவிமரமாக களம் இறங்கி உள்ளார்.

இது குறித்த செய்திகளை இண்டியாகேட் செய்தி தளம் விரிவாக வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் கட்சியின் மூத்த பிரமுகரான பழனியப்பனிடம் செந்தில் பாலாஜி தொடர்பில் இருந்தார். திமுகவுக்கு அவர் அழைத்த விடுப்புக்கு பழனியப்பனும் சிக்னல் கொடுத்து இருந்தார்.

கட்சி தலைமையிடம் செந்தில் பாலாஜி பேச… அனைத்தும் முடிவாகி இருக்கிறது. இன்று மாலை திமுகவில் ஐக்கியம் என்பது இறுதியாக... இது குறித்து தமது ஆதரவாளர்களிடம் விரிவாக நிலைமையை எடுத்து சொல்லி இருக்கிறார் பழனியப்பன்.

அவரின் நிலைப்பாடும், ஆதரவாளர்கள் நிலைப்பாடும் ஒரே புள்ளியில் இருக்க…. பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து கிளம்பி இருக்கிறார். சென்னையில் செந்தில் பாலாஜி அவரை வரவேற்க…. நேராக அறிவாலயம் பயணம்.

அங்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தம்மை இணைத்துக் கொண்டார் பழனியப்பன். அமமுகவின் பவர்புல் பொறுப்பில் இருந்த அவர் திமுகவில் சேர்ந்திருப்பது டிடிவி தினகரனை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பழனியப்பன் போன்று மேலும் பலர் அடுத்த கட்டமாக திமுகவில் ஐக்கியமாக உள்ளதாகவும் போனஸ் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதிமுகவும் தம் பங்குக்கு அமமுக முக்கிய பிரமுர்களுக்கு வலை வீச… நாளுக்கு நாள் அமமுகவுக்கு இனி சேதாரம் அதிகம் தான் என்று கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்…!

Most Popular