எவ்வளவோ ஜாக்கிரதையாக இருந்தேன்… கொரோனா வந்துடுச்சு.. கதறும் பிரபல நடிகை…!
சென்னை: சர்வ ஜாக்கிரதையாக இருந்தும் தமக்கு கொரோனா வந்துவிட்டதாக பிரபல நடிகை சுனைனா பெரும் கவலையில் உள்ளார்.
யாருக்கு எப்போது வரும் என்று சொல்லமுடியாது என்பதை மெய்ப்பித்து வருகிறது கொரோனா. அரசியல் பிரமுகர்கள், விஐபிக்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பாரபட்சம் இல்லாமல் போட்டு தாக்கி வருகிறது கொரோனா.
இப்போது அதில் லேட்டஸ்ட்டாக பிரபல நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நடிகை தான் சுனைனா. இதை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், சர்வ ஜாக்கிரதையாக இருந்தும் கொரோனா தம்மை தொற்றிவிட்டது என்று கவலையுடன் கூறி இருக்கிறார்.
அவர் மேலும் கூறி இருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம்… மிகவும் கவனமாக இருந்தபோதிலும் எனக்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டது. நான் வீட்டிலிருந்து தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். நான் எல்லா விதிகளையும் பின்பற்றுகிறேன். எனது குடும்பத்தைத் தவிர வேறு யாருடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் அனைவரும் தனியாக இருக்கிறார்கள்.
எனது சமூக வலைப்பக்கங்களை ஒதுக்கி வைத்து ஓய்வெடுக்க விரும்பினாலும், உதவக்கூடிய, சிறிய அல்லது பெரிய விஷயங்களை தேவைப்படுபவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை. முகமூடி அணியுங்கள். வீட்டில் இருங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறி உள்ளார்.