Sunday, May 04 12:57 pm

Breaking News

Trending News :

no image

பொதுக்கூட்ட மேடை… பேசியபடியே மயங்கி சரிந்த முதலமைச்சர்…! தொண்டர்கள் ஷாக்…!


வதோதரா: தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் பேசிக் கொண்டிருந்த குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீரென மயங்கி விழ, பெரும் பரபரப்பு எழுந்தது.

குஜராத் மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.அதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கி உள்ளன. அதன் ஒரு பகுதியாக வதோதராவின் நிஜம்புரா என்ற பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் அப்படியே மயங்கி சரிந்தார். அவரது அருகில் பாதுகாவலர்கள் நல்வாய்ப்பாக ரூபானியை தாங்கி பிடித்தனர்.

மேடையிலேயே உடனடியாக விஜய் ரூபானிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அகமதாபாதில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பொதுக்கூட்ட மேடையில், முதலமைச்சர் மயங்கி விழுந்த சம்பவம், குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Most Popular