ஸ்டாலினை சந்திக்க தயாராகும் ரஜினி….? கொரோனாவுக்காக களத்தில் செய்யும் ‘அந்த’ காரியம்…!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாகவும், அப்போது கொரோனா நிவாரண நிதி தர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஐதராபாதில் இருந்து இன்று தான் சென்னை திரும்பி உள்ளார். வழக்கமாக அதே வெள்ளை குர்தாவில் பரபரவென்று அவரை ஊடகங்களில் கண்ட ரசிகர்கள் குஷியில் உள்ளதோடு அண்ணாத்த படம் பற்றியும் சிலாகிக்க ஆரம்பித்துள்ளனர்.
அண்ணாத்த படத்தில் தமது போர்ஷன் அனைத்தையும் ரஜினிகாந்த் முடித்துக் கொடுத்துவிட்டு தான் சென்னை வந்திருக்கிறார். எனவே இனி அவர் அந்த படத்துக்கு டப்பிங் கொடுப்பது தான் பாக்கி. முழு மூச்சில் தாம் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் நடித்து கொடுத்துவிட்டுள்ளதால் படக்குழு ஏக சந்தோஷத்தில் இருக்கிறது. படத்தை எப்படியாவது தீபாவளிக்கு கொண்டு வர படத்தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது.
சென்னை திரும்பியுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று முதலமைச்சராகி உள்ள ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெறும் வாழ்த்து கூறுவதோடு இல்லாமல் கொரோனா ஒழிப்பு பணியில் தம்மை ஈடுபடுத்தும் விதமாக ஒரு பெரிய நிதியை நிவாரண நிதியாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.