#BiggBoss 7 பிரபல நடிகையை வூடு புகுந்த அடித்த நபர்…!
சென்னை: பிரபல நடிகையை பிக் பாஸ் விவகாரத்தை மையமாக வைத்து வீடு புகுந்து மர்ம நபர் தாக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்று ஏக பிரபலம். தமிழ் போலவே தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமானவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
7வது சீசனாக தற்போது தனியார் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அருவருக்கத்தக்க வகையில் போட்டியாளரான பிரதீப் ஆண்டனி நடந்து கொண்டார் என்று கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது…. டிஆர்பி ரேட்டிங் டெக்னிக் என்றும் கூறப்பட்டது. இந் நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் தமது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டு உள்ள செய்தி, பெரும் பரபரப்பாகி உள்ளது.
அதில், தம்மை வீடு புகுந்து மர்ம நபர் ஒருவர் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதை ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டு தாக்கியதாக கூறி உள்ளார்.
அந்த பதிவில், இரவு ஒரு மணிக்கு பிக் பாஸ் பிரதீப் ரசிகர் தன்னை தாக்கியதாக வனிதா விஜயகுமார் குற்றச்சாட்டி உள்ளார். தாக்கியதில் தமக்கு ஏற்பட்ட காயத்தையும் அவர் போட்டோவாக வெளியிட்டு இருக்கிறார்.
இதை கண்ட நெட்டிசன்ஸ், இதுவும் வழக்கம் போல் டிஆர்பி ரேட்டிங் ட்ரிக்ஸ் என்றும், வனிதாவின் கடந்த கால நடவடிக்கைகளை வெளியிட்டும் ட்ரோல் செய்து வருகின்றனர்.