அடடா.. இப்படி நடந்து போச்சே..! ரஜினி, கமலுடன் நடித்த நடிகர் திடீர் மரணம்…!
சென்னை: பழம்பெரும் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜி. ராமசந்திரன் காலமானார். அவருக்கு வயது 73.
தமிழ் திரையுலகத்துக்கு இப்போது போதாத காலம். கடந்த 2 மாதங்களாக முக்கிய திரையுலக பிரபலங்கள் உயிரிழக்கும் செய்திகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன. இப்போது லேட்டஸ்ட்டாக ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்தவரும், சினிமா தயாரிப்பாளருமான ஜி. ராமசந்திரன் காலமானார். அவருக்கு வயது 73.
கமல்ஹாசன் அறிமுகமாக களத்தூர் கண்ணம்மா, எட்டுப்பட்டி ராசா, நாட்டுப்புற பாட்டு, ராஜாதி ராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். திரையுலகில் அன்புடன் ஜிஆர் என்று அழைக்கப்படுபவர்.
காசு இருக்கணும், மனுநீதி, சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட பல படங்களையும் தயாரித்தவர். கன்னட பட உலகிலும் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அண்மையில் மனைவி பூரணி மறைந்துபோனது முதல் ஜிஆர் பெரும் சோகமாகவே காணப்பட்டார்.
அதன் காரணமாக உடல்நலமும் பாதிக்கப்பட இன்று ஜிஆர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அறிந்த பல்வேறு திரையுலகங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.