Sunday, May 04 12:48 pm

Breaking News

Trending News :

no image

ஜெயலலிதா வீட்டில் இருந்த நகை, புடவைகள் எவ்வளவு தெரியுமா..? மலைக்க வைத்த பட்டியல்


சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் என்ன பொருட்கள் உள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் அரசுடைமையானது. அதற்கான அறிவிப்பை தமிழக அரசானது, அரசிதழில் வெளியிட்டுள்ளது.

போயஸ் தோட்டத்தின் வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட நீதிமன்றத்தில் இழப்பீடும் தொகை செலுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் அரசிதழில் ஜெயலலிதா வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்ற விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

தங்கம்: 4.372 கிலோ

வெள்ளி: 601.424 கிலோ

ஏசி: 38

பர்னிச்சர் பொருட்கள்: 556

பிரிட்ஜ்கள்: 10

சமையலறை பொருட்கள்: 6514

பூஜை பொருட்கள்: 15

உடை வகைகள்: 10,434

தொலைபேசிகள் மற்றும் மொபைல் போன்கள்: 29

கிச்சன் பொருட்கள்: 221

எலக்ட்ரிக்கல் பொருள்கள்: 251

புத்தகங்கள்: 8376

ஸ்டேஷனரி பொருட்கள்: 253

பர்னிச்சர் பொருள்கள்ள் 1712

காஸ்மெட்டிக் பொருட்கள்ள் 108

கடிகாரங்கள்: 6

 

மொத்தம்: 32,721 பொருட்கள்

Most Popular