மாஸ்டர் கார்டு, டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியுமா…? ஆர்பிஐ போட்ட ஆர்டர்
டெல்லி: மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமித்து வைப்பதில் ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மீறப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை மூலம், புதிய வாடிக்கையாளர்கள் யாரும் மாஸ்டர் கார்டுகளை பெற முடியாது.
ஏற்கனவே கார்டு வைத்துள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் புதிதாக எந்த வாடிக்கையாளர்களுக்கும் இனி மாஸ்டர் கார்டு வழங்க முடியாது.
போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதும், வாடிக்கையாளர்களின் தரவுகளை சேமிப்பதில் மாஸ்டர்கார்டு நிறுவனம் அக்கறை காட்டவில்லை. ஆகையால் அதிரடி நடவடிக்கையாக ஆர்பிஐ இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.