இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை பார்க்கலாம்:
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கேவை முன்மொழிவதாக நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 10 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. அமைச்சர்கள் அனைவருக்கும் ஆளுநர் மங்குபாய் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னையில் இன்று நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தென்மாவட்டங்களை புரட்டி போட்ட மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடிக்கு வருகிறார்.
பழமையான மற்றும் புகழ்பெற்ற கோவில்களுக்கு அருகில் அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கக்கூடாது என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் வரும் 28ம் தேதி முதல் தட்டம்மை தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
584வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை எதிரொலியாக சிட்னி விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த 23 மாகாணங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி, அரியானா ஸ்டீலர்ஸ் அணியுடன் மோதி வெற்றி வாய்ப்பை இழந்தது.