ரஜினியின் அருகில் இருக்கும் இந்த குழந்தை…! 40 ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை…!
ரஜினிகாந்தின் காளி படத்தில் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம் சிறு குழந்தையாக நடித்துள்ள விவரம் இப்போது வெளியாகி ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டராகி விளங்குபவர் ரஜினிகாந்த். தொடக்க காலத்தில் எந்த பின்புலமும் இல்லாமல் தனியாக சென்னை வந்து திரைத்துறையில் முன்னேறி பல சாதனைகளை படைத்தவர்.
அவருடைய படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும் திரையுலகில் பிரபலமாக உள்ளனர். அப்படி ஒருவர் தான் இப்போது திரையுலகில் பேரும், புகழும் பெற்ற பாடகியாக இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல… அனுராதா ஸ்ரீராம்.
ரஜினியின் காளி படத்தில் சின்னஞ்சிறு சிறுமியாக அனுராதா ஸ்ரீராம் நடித்து இருப்பார். அவருடன் சிறுவனாக காஜா செரிப்பும் நடித்திருப்பார். காளி படம் 1980ம் ஆண்டு வந்தது. கிட்டத்தட்ட40 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலிசாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம்.
காளி படத்தில் ரஜினியுடன் அனுராதா ஸ்ரீராமும், காஜா செரிப்பும் நடித்து இருப்பதாக ரஜினியின் மக்கள் மன்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. ரஜினியின் இந்த படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பம்பாய் திரைப்படத்தில் குழு பாடகராக ஏஆர் ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அதன் பின்னர் அனைத்து இசையமைப்பாளர்களின் படங்களில் பாடி அசத்தி இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நிறைய பாடல்களை பாடி அசத்தி இருக்கிறார்.