ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள்…! மருத்துவமனை அறிக்கை
சென்னை: ஓ பன்னீர்செல்வத்துக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.
அதிமுகவில் தலைமை பதவி விவகாரம் பல்வேறு திசைகளில் பயணித்து வரும் நிலையில் ஓபிஎஸ் இடைவிடாமல் தமது ஆதரவாளர்களை சந்தித்தபடி இருந்தார். ஓய்வில்லாமல் இருந்த அவரது உடல்நிலையில் திடீர் சோர்வு ஏற்பட எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. நேற்று முதல் மருத்துவமனையில் அவர் சிகிக்சை பெற்று வருகிறார்.
இந் நிலையில் அவரது உடல்நிலை பற்றிய லேட்டஸ்ட் நிலவரத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. கொரோனா அறிகுறியுடன் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார்.
உடல்நிலை சீராகவே உள்ளது. மருத்துவர்களின் மூலம் ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.