கொரோனா டெஸ்ட் எடுக்க வந்த பெண்…! மதுரையில் நடந்த விபரீதம்…!
மதுரை: மதுரை அருகே கொரோனா டெஸ்ட் எடுப்பதாக கூறி வந்த பெண் கொள்ளையடித்ததால் கைது செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. ஊரடங்கு காரணமாக, கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந் நிலையில் கொரோனா டெஸ்ட் எடுப்பதாக கூறி பெண் ஒருவர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்ப்பட்டியை சேர்ந்தவர் மூதாட்டி முனியம்மாள்.
அவரது வீட்டுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வந்திருப்பதாக கூறி பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் இரட்டை மாஸ்க் அணிந்து வந்திருக்கிறார். வந்த அப்பெண் மூதாட்டியை கட்டி போட்டு, அவரிடம் இருந்த 11 சவரன் நகையை திருடி இருக்கிறார்.
சந்தேகம் அடைந்த மூதாட்டி, அந்த பெண்ணின் மாஸ்க்கை அகற்றி உள்ளார். பார்த்தவருக்கு கடும் அதிர்ச்சி…. வந்தவர் முனியம்மாளின் சொந்த பேத்தி உமாதேவி என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியம்மாளின் பேத்தியை கைது செய்துள்ளனர்.