Sunday, May 04 12:38 pm

Breaking News

Trending News :

no image

சோகத்தில் திரையுலகம்…! ‘96’ காதலே… காதலே பாடல்… பிரபல பாடகி திடீர் மரணம்


சென்னை: பிரபல இயக்குநர் ராஜிவ் மேனனின் அம்மாவும், பின்னணி பாடகியுமான கல்யாணி மேனன் காலமானார். அவருக்கு வயது 80.

தமிழில் மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் உள்ளிட்ட பல படங்களை இயக்குநர் ராஜிவ் மேனன். இவர் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். இவரது தாயார் கல்யாணி மேனன். திரையுலகின் பின்னணி பாடகி.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான பாடல்களை அவர் பாடி இருக்கிறார். ஏஆர் ரஹ்மான் இசையிலும் பாடல்களை பாடி அசத்தியவர். காதலன் படத்தில் இந்திரையோ இவர் சுந்தரியோ பாடல், விண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஓமன பெண்ணே என்ற பாடல், 96 படத்தில் காதலே, காதலே (ஒரிஜனல் சவுண்ட் டிராக்) பாடலை பாடி உள்ளார்.

80 வயதான அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். தீவிர சிகிக்சை அளித்தும் பலனின்றி இன்று கல்யாணி மேனன் காலமானார். அவரது மறைவை அறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular