#Olympiad ரஜினிகாந்த் போட்ட டுவிட்டர்…! அந்த போட்டோ தான் மாஸ்…
சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் இன்று தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சர்வதேச அளவிலான இந்த போட்டியில் கிட்டத்தட்ட 180க்கும் அதிகமான நாடுகளில் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் இந்த விளையாட்டு விழா வெற்றி பெற பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை வெளியிட்டு உள்ளனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தமது வாழ்த்துகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: உள்ளரங்க விளையாட்டான செஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
செஸ் விளையாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாட வாழ்த்துகள். கடவுள் ஆசீர்வதிப்பார் என்று கூறி உள்ளார். இந்த வாழ்த்துடன் தாம் செஸ் விளையாடும் போட்டோவையும் போட, ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்துள்ளனர்.