கமலுக்கு வந்த புது சிக்கல்…! தீர்க்க முடியாமல் தவிப்பு
சென்னை: இந்தியன் 2 படத்தால் விக்ரம் படப்பிடிப்பை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் நடிகர் கமல்ஹாசன் குழம்ப தவித்து வருகிறாராம்.
அரசியல் நீரோட்டத்தில் ஒரு பக்கம் கமல்ஹாசன் நீந்தி வந்தாலும் மறுபக்கம் சினிமாவிலும் நடித்து வந்தார். ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கடந்தாண்டு விபத்து நிகழ, அதன் பின்னர் இன்னமும் அந்த படத்தின் ஷுட்டிங் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்தியன் 2 படம் இன்னமும் ஆரம்பிக்காத நிலையில் 2 புதுப்படங்களை இயக்க ஷங்கர் கமிட்டாகி உள்ளார். ஆனால் இதற்கு ஒப்பு கொள்ளாத லைகா நிறுவனம், இந்தியன் படத்தை முடித்துக் கொள்ளாமல் எந்த படத்தையும் இயக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் கதவை தட்டி இருக்கிறது.
ஒருவழியாக பேச்சுவார்த்தையில் பிரச்னையை முடித்து கொள்ளுமாறு நீதிமன்றம் கூற, பேச்சுவார்த்தையும் நடந்தது. அதிலும் பிரச்னை முடியாமல் போக நீதிமன்றத்தின் தீர்ப்பை லைகாவும், ஷங்கரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
நிலவரம் இப்படி தொங்கலில் இருக்க…. லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் நடிக்கும் முடிவில் இருக்கிறார் கமல். கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் படப்பிடிப்பை எப்போது துவங்குவது என்று ஆலோசனையில் இருக்க இந்தியன் 2 படத்தின் விவகாரம் அவருக்கு பெரும் தடையாக இருக்கிறதாம்.
ஐகோர்ட் என்ன சொல்ல போகிறது என்பது தெரியாததால் அதன் முடிவை தொடர்ந்து விக்ரம் படப்பிடிப்பு தொடங்க முடியுமாம். இந்தியன் 2 படத்தை உடனடியாக முடித்துக் கொடுக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டால் கமல் அந்த படத்தில் நடிக்க வேண்டும். விக்ரம் படத்தின் ஷூட்டிங்கை தொடங்க முடியாது. ஆகையால் என்ன செய்வது என்பது தெரியாமல் இந்த சிக்கலால் கடும் குழப்பத்தில் கமல் தவித்து வருகிறாராம்.