நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் திடீர் மரணம்…!!
பெய்ஜிங்: சீனாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் க பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் மாகாணம் ஜிக்சி நகரில் ஒரு வீட்டில் புளித்த சோள மாவில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ், ஒரு வருடத்திற்கும் மேலாக பிரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
அந்த உணவை குடும்பத்தினர் சமைத்து சாப்பிட்டு உள்ளனர். அவர்களில் 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மற்றொருவர் நீண்ட மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார்.
சூடோமோனாஸ் கோகோவெனான்கள் என்ற பாக்டீரியத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு அமிலம் பலியானவர்களின் இரைப்பையில் கண்டறியப்பட்டது. பொதுவாக சோள மாவில் தயாரிக்கப்படும் நூடுல்சானது, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒருவகை ரசாயனத்தால் கெட்டுப்போகும்.
அவ்வாறு கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட்டதும் வயிற்று வலியில் தொடங்கி 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும். அப்படித் தான் சீனாவிலும் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.