பாம்பு உள்ளே வந்துருச்சா..? போன் நம்பர் இந்தாங்க
சென்னை: சென்னையில் மழையில் பாம்புகள், விஷ ஜந்துக்கள் வந்தால் அவற்றை பிடிப்பவர்களின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஒரேநாளில் சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் பதம் பார்த்துவிட்டது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் புகுந்து ஆட்டம் காட்ட, மக்கள் தவித்து போயினர்.
மழை வெள்ளத்துடன் பாம்பு, முதலை, விஷ ஜந்துகள் ஊர்ந்து வர தொடங்கி உள்ளன. மழைநீரில் நடந்து செல்பவர்களை கடித்தும் விடாமல் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் பாம்பு பிடிப்போர் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:
பாபா - 98415 – 88852 – வளசரவாக்கம், போரூர், பூந்தமல்லி, அய்யப்பன்தாங்கல், கோயம்பேடு மற்றும் நெற்குன்றம்
சக்தி – 90943 -21393 – ராமாபுரம், மணப்பாக்கம், முகலிவாக்கம், பெரம்பூர்
கணேசன் - 74489 - 27227 – அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை
ஜெய்சன் – 80562 - 04821 – குரோம்பேட்டை
ராபின் – 88078 - 70610 – தாம்பரம்
மணிகண்டன் – 98403 - 46631 – ஆலப்பாக்கம்